0.6 C
New York
Wednesday, February 4, 2026

சூரிச்சை இரவு நேர ரயில் மற்றும் பேருந்து மையமாக மாற்ற திட்டம்.

ஐரோப்பாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்தை ஊக்குவிக்க, சூரிச் இரவு நேர ரயில்கள் மற்றும் பேருந்துகளுக்கான மையமாக மாற திட்டமிட்டுள்ளது.

சூரிச் நகரம் மற்றும் சூரிச் சுற்றுலாவின் ஆய்வைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

டிசம்பரில் சூரிச் வெளியிட்ட சமீபத்திய காலநிலை பாதுகாப்பு அறிக்கை, குடியிருப்பாளர்கள் பறப்பதற்கு தயங்குவதில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

2024 ஆம் ஆண்டில் மக்கள் சராசரியாக 2.5 விமானப் பயணங்களை முடித்தனர். ஒரு நபர் 10,000 கிலோமீட்டர்கள் பறந்ததில் ஆறில் ஒரு பங்கினர் மட்டுமே வேலை தொடர்பான காரணங்களுக்காக பறந்துள்ளனர்.

இந்த நிலையில் சூரிச் நகரம் மற்றும் சூரிச் சுற்றுலா இப்போது சூரிச்சை ஐரோப்பிய இரவு நேர பேருந்து மற்றும் ரயில் இணைப்புகளுக்கான மையமாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.

ரயில்களின் திறனை சிறப்பாகப் பயன்படுத்தவும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இன்றைய இரவு ரயில்கள் சுமார் 250 பேருக்கு இடமளிக்கும்.

“ஜம்போ கொன்செப்ட்” மூலம், 1500 பயணிகளை ஒரே ரயிலில் கொண்டு செல்ல முடியும். தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமானது.

Related Articles

Latest Articles