19.5 C
New York
Saturday, June 20, 2026

சுவிஸ் எயர்லைன்சில் இரண்டாவது ஏர்பஸ் A350 விமானம்.

சுவிஸ் இன்டர்நேஷனல் எயர்லைன்ஸ் தனது இரண்டாவது ஏர்பஸ் A350 நீண்ட தூர விமானத்தை பெற்றுள்ளது.

“டெலிமாண்ட்” என்று பெயரிடப்பட்ட புதிய விமானம், பிப்ரவரி 23, ஆம் திகதி சூரிச்சிலிருந்து மொன்றியலுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும் என்று சுவிஸ் எயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

2026 கோடை கால அட்டவணையிலிருந்து, பொஸ்டன் மற்றும் சியோலுக்கான நீண்ட தூர பயங்களுக்கு A350 விமானங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த ஆண்டு மேலும் A350 விமானங்கள் விமானக் குழுவில் சேர்க்கப்படும். சுவிஸ் அதன் நீண்ட தூர விமானக் குழுவை நவீனமயமாக்க மொத்தம் 10 விமானங்களை முன்பதிவு செய்துள்ளது.

கூடுதலாக, தற்போதுள்ள ஏர்பஸ் A330 நீண்ட தூர விமானங்கள் புதுப்பிக்கப்படும். இந்த விமானங்களில் ஒரு புதிய கபின் நிறுவும் பணி இந்த ஆண்டு தொடங்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles