21.5 C
New York
Saturday, June 20, 2026

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் பிராங்- வழங்கும் பணி தொடங்கியது.

கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வலைஸ் மாகாணம் முதல்க்ட்ட அவசர உதவியாக 10,000 பிராங்கை வழங்கியுள்ளது.

48 பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

“கோரப்பட்ட ஆவணங்கள் பெறப்பட்டதும் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, பணம் செலுத்துவதற்காக வங்கிக்கு அனுப்பப்படுவதாக வலைஸ் மாகாணம் நேற்று அறிவித்துள்ளது.

முதலில் 10,000 பிராங் வழங்குவதாக ஜனவரி 14 ஆம் திகதி மாகாணம் அறிவித்திருந்தது.

குறைந்தபட்ச நிர்வாக சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் தான், பணம் செலுத்த சிறிது நேரம் காலம் தேவைப்பட்டது என்றும் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செவுத்தப்பட்டுள்ள 48 கொடுப்பனவுகளில், 14 வெளிநாட்டு கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன அவற்றில் பிரான்சில் ஏழு, இத்தாலியில் ஆறு மற்றும் பெல்ஜியத்தில் ஒன்று என வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles