0.3 C
New York
Friday, February 6, 2026

ஆற்றில் மிதந்த சடலம் – படகில் இருந்து விழுந்தவரா?

யெவர்டன்-லெஸ்-பெயின்ஸில் உள்ள தியேல் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 9:36 மணியளவில் அவசரகால எண் 117 ஐ அழைத்த ஒருவர் தனது படகுக்கு அருகில் ஆற்றில் மிதக்கும் சடலத்தைக் கண்டதாகக் கூறினார்.

ஜெண்டர்மேரி அதிகாரிகள், கடல் படையணியைச் சேர்ந்த சுழியோடிகள் மற்றும் வடக்கு வாட் காவல்துறையின் ரோந்துப் படையினர், தடயவியல் காவல்துறையின் நிபுணர்கள் இணைந்து சடலத்தை மீட்டனர்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளில், அந்த நபர் தனது படகின் மேல்தளத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து மூழ்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles