1.3 C
New York
Monday, February 16, 2026

அலகில் சிக்கிய தூண்டில்- மருத்துவமனைக்குச் சென்று உதவி கோரிய நீர்க்காகம்.

அலகில் தூண்டில் சிக்கிய நிலையில் நீர்க்காகம் ஒன்று மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று உதவி கோரியுள்ளது. ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள, பிரெமனில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்க்காகம் அதன் அலகால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவு கதவின் கண்ணாடியைக் குத்தியதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

பிரெமனில் உள்ள Klinikum Links der Weser மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்குச் சென்று, நீர்க்காகத்தைப் பிடித்து மருத்துவமனை ஊழியர்களால், தூண்டில் அகற்றப்பட்டு, காயத்துக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர், பறவை மருத்துவமனையின் பூங்காவில் காட்டுக்குள் விடப்பட்டது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles