10.5 C
New York
Saturday, February 28, 2026

ஈரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் நிலை என்ன?

ஈரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கப்பட்ட போதும் அது தொடர்ந்து செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களில் சுவிஸ் தூதரக ஊழியர்கள் 14 பேரில் இருந்து 10 பேராகக் குறைக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை காலை அறிவித்தது.

சுவிஸ் தூதுவர் நாடின் ஒலிவியேரி லோசானோ அங்கு உள்ளார், தூதரகம் தற்போது “செயல்பாட்டில் உள்ளது.

அதேபோன்று, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவில் உள்ள சுவிஸ் தூதரகமும் செயல்பாட்டில் உள்ளது.

எனினும், ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உட்பட எந்த கூடுதல் விவரங்களையும் வெளியுறவு அமைச்சுவழங்கவில்லை.

அதேவேளை, சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவு மூலம் வெளியுறவு அமைச்சு அனைத்து தரப்பினரையும் சர்வதேச சட்டத்தை மதிக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் அழைப்பு விடுத்தது.

இன்று காலை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்கிய பிறகு, சுவிஸ் அரசாங்கம் இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கைகளை கடுமையாக்கியது.

சனிக்கிழமை காலை வெளியுறவு அமைச்சின் தகவலின்படி, ஐந்து பேர் தற்போது ஈரானில் பயணிகளாக உள்ளனர். இஸ்ரேலுக்கு பயணம் செய்த 20 சுவிஸ் நாட்டவர்கள் உள்ளனர்.

அதேவேளை இஸ்ரேலில் சுமார் 25,000 சுவிஸ் குடிமக்களும் ஈரானில் 180 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles