16 C
New York
Saturday, May 16, 2026

நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிப்புச் சம்பவம்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றுஅதிகாலை 1:00 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், ஏராளமான அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. ஈரானின் பதிலடித் தாக்குதல்களில் பல தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஒஸ்லோவில் நடந்த வெடிப்பு ஈரானுடனான போருடன் தொடர்புடையதா என்பது குறித்து நோர்வே பொலிசார் ஆரம்பத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Related Articles

Latest Articles