சூரிச்சில் உள்ள பெல்லெரிவெஸ்ட்ராஸில் நேற்று பெரியதொரு பொலிலீஸ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஒரு கட்டிடத்திற்கு எதிரான அச்சுறுத்தலை அடுத்தே இந்த நடவடிக்கை இடம்பெற்றதுடன், வீதிகள் மூடப்பட்டிருந்தன.
நேற்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளான கட்டிடம் தொடர்பாக தகவல்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை. சம்பவ இடத்தில் ஏராளமான பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்தனர். சிலர் அதிக ஆயுதம் ஏந்தியிருந்தனர்.
இந்த நடவடிக்கை காரணமாக அருகிலுள்ள கிளாஸ்ட்ராஸ்ஸும் மூடப்பட்டது. ஆர்காவ் மாகாணத்திலிருந்து கூடுதல் அவசரகால பணியாளர்கள் சூரிச்சிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பெல்லெரிவெஸ்ட்ராஸில் இந்த பொலிஸ் நடவடிக்கை முடிவடைந்து விட்டதாக பவேரியன் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்- bluewin

