26.6 C
New York
Friday, September 4, 2026

போஸ்ட் பஸ் இற்குள் தீக்குளித்த நபர் யார்?

போஸ்ட் பஸ் தீவிபத்து, வேண்டுமென்றே தீ வைக்கப்பட்ட சம்பவம் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், சரியான சூழ்நிலைகள் இன்னும் விசாரணையில் உள்ளன.

- Advertisement -

இது பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்து பொலிசார் இன்னமும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பஸ் இல் இருந்த ஒருவர், பெட்ரோல் போன்ற திரவத்தை ஊற்றி தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்து ஒருவர் அலறியபடி ஓடி வருகிறார், அவரது கைகளில் தீக்காயங்கள் இருப்பது போல் தெரிகிறது. பின்னணியில் வலியின் அலறல்கள் கேட்கின்றன.

காயமடைந்த நபர் அல்பேனிய மொழியில் “ஒருவர் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். அவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles