25.4 C
New York
Thursday, August 13, 2026

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து- 29 பேர் பலி.

கிரீமியன் குடாநாட்டில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் அடங்குவதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தின் சிதைவுகளில் வெளிப்புறத் தாக்கத்திற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்கான காரணமாக கருதப்படுகிறது.

அன்டோனோவ்-26 போக்குவரத்து விமானம், தீபகற்பத்தின் மீது பயணத்தில் இருந்தபோது, ​​உள்ளூர் நேரப்படி நேற்று மாலை சுமார் 6:00 மணிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

Related Articles

Latest Articles