சூரிச்சின் புலாச்சில் உள்ள ஆல்மென்ட்ஸ்ட்ராஸ் தெருவில் வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், 51 வயதான துருக்கியர் ஒருவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சூரிச் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், பாதிக்கப்பட்டவரை அறிந்த 54 வயதான துருக்கியர் ஆவார். அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, அடையாளம் தெரியாத திசையில் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றார்.
இன்று காலை 10 மணியளவில், லூசெர்ன் காவல்துறை கிரியன்ஸில் அந்தத் துருக்கியரைக் கைது செய்தது.
சம்பவங்களின் சரியான வரிசை மற்றும் அதற்கான நோக்கம் ஆகியவை குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மூலம்- swissinfo

