28.8 C
New York
Friday, August 14, 2026

உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஜிக் சாண்ட் – விற்பனையில் இருந்து மீளப்பெற உத்தரவு.

அஸ்பெஸ்டஸ் எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, ஜெர்மன் தயாரிப்பான மோசஸ் வெர்லாக், தனது ஃபானோமின்ட் மஜிக் சாண்ட் என்ற தயாரிப்பைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது உடல்நல அபாயத்தை ஏற்படுத்தக் கூடும்.

சோதனைகளின் போது சில தயாரிப்புகளில் அஸ்பெஸ்டஸ் தடயங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மஜிக் சாண்ட் சுவிட்சர்லாந்திலும் விற்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுடன் இணைந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக பொருளாதார அமைச்சு மற்றும் கூட்டாட்சி நுகர்வோர் விவகாரப் பணியகம் தெரிவித்துள்ளன.

மோசஸ் வெர்லாக், நுகர்வோரை உடனடியாக இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதை கடைக்குத் திருப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறது. வாங்கிய விலை முழுமையாகத் திருப்பித் தரப்படும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles