செக்செலௌட்டன் திருவிழா (Sechseläuten festival) சூரிச்சில் இன்று நடைபெறுகிறது. ஊர்வலம் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது, மாலை 6 மணிக்கு பூக் (Böögg) எரியூட்டப்படும்.
இதற்கு முந்தைய நாளான நேற்று குழந்தைகள் ஊர்வலம் நடைபெற்றது.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாரம்பரிய அல்லது வரலாற்று உடைகளை அணிந்து சூரிச்சின் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 குழந்தைகளும் 800 இசைக்கலைஞர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
இதனைக் காண வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
மூலம்- 20min

