23.4 C
New York
Thursday, August 13, 2026

சுவிசுக்கு மருத்துவக் கட்டணத்தை செலுத்த முடியாது – இத்தாலித் தூதுவர் தெரிவிப்பு.

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவக் கட்டணங்களை இத்தாலி ஒருபோதும் செலுத்தாது என்று சுவிட்சர்லாந்திற்கான இத்தாலிய தூதுவர் கூறியுள்ளார்.

“மிலனில் உள்ள நிகுவார்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சுவிஸ் நாட்டினருக்கான மருத்துவக் கட்டணத்தை நாங்கள் செலுத்துவோம், ஏனெனில் இத்தாலி இலவசமாக உயிர்களைக் காப்பாற்றுகிறது,” என்று ஜியான் லொரென்சோ கொர்னாடோ, தெரிவித்துள்ளார்.

ஆனால், சுவிட்சர்லாந்தால் இத்தாலிய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட மருத்துவக் கட்டண ரசீதுகளை “நாங்கள் செலுத்த மாட்டோம்: அது நிச்சயம், அவர்களது குடும்பத்தினரும் நிச்சயமாகச் செலுத்தமாட்டார்கள்.”என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை அன்று, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தக் கோரிக்கையை “இழிவானது” என்று வர்ணித்து, இத்தாலி அவற்றைச் செலுத்தாது என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை அன்று, சுவிட்சர்லாந்தின் வாலாய்ஸ் மாகாணம், அதன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இத்தாலிய நோயாளிகளுக்கான மருத்துவக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

சியோனில் நான்கு இளம் இத்தாலியர்கள் “ஒரே ஒரு நாளுக்கு” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான செலவு 120,000 பிராங்கைத் தாண்டுகிறது என்று இத்தாலிய தூதுவர் தெரிவித்தார்.

இந்தச் செலவுகள், ஐரோப்பிய விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள வழிமுறையின்படி இத்தாலிய சுகாதார அமைச்சகத்திற்குச் செலுத்தப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 115 பேர் காயமடைந்தனர். இந்தத் தீ விபத்திற்கு சுவிட்சர்லாந்து “மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பை” ஏற்கிறது என்பதால், அது இத்தாலியிடம் இழப்பீடு கோருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தீ பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறியதையும், கட்டுப்பாடுகள் இல்லாததையும் சுட்டிக்காட்டி, “கிரான்ஸ்-மொன்டானாவில் நடந்த படுகொலையை ஒரு கார் விபத்து போலக் கருத முடியாது” என்று அவர் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles