ஒரு ஆர்ப்பாட்ட அமைப்பாளரின் ஒன்றுகூடல் மற்றும் சங்க சுதந்திரத்தை சுவிட்சர்லாந்து மீறியதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (ECHR) தீர்ப்பளித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில், 2019-ல் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அனுமதியின் நிபந்தனைகளை மீறினால், அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும் என்று அந்த அமைப்பாளருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரங்கள் ஏற்பட்டதால், திறனற்ற பாதுகாப்பு சேவையைக் கொண்டிருந்ததாக சுவிஸ் நீதிமன்றங்கள் அந்த அமைப்பாளரின் மீது குற்றம்சாட்டின.
அவர் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்பட்டு, 200 பிராங் அபராதம் விதிக்கப்பட்டார்.
பின்னர் அவர், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இன்று வெளியிடப்பட்ட ஸ்ட்ராஸ்பர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்த அமைப்பாளரின் நியாயமான விசாரணைக்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் சங்க சுதந்திரம் ஆகியவை மீறப்பட்டதை ஏற்றுக்கொண்டது.
மூலம்- swissinfo

