ஆர்காவ் மாகாணத்தின் ஆஃப்ட்ரிங்கன் பகுதியில் நேற்று மதியம் பெர்ரி சென்டரில் உள்ள ஒரு கியோஸ்க்கை ஒருவர் கொள்ளையடிக்க முயன்றார்.
கறுப்பு உடை அணிந்திருந்த ஒருவர் கியோஸ்க் ஊழியர்களை மிரட்டி, ‘பணப்பெட்டியைத் திற!’ என்று கத்தினார்.
அந்த நபர் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததுடன், கறுப்புத் துணியால் முகத்தை மூடியிருந்தார்.
அவர் கொள்ளையில் ஈடுபட முயன்ற போதும் அது பலனளிக்காத நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகப்படும் குற்றவாளியைத் தேடுவதற்காக, ஆஃப்ட்ரிங்கனில் தற்போது ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
அந்த நபரின் இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த சாட்சிகள் முன்வருமாறு மாகாண காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
மூலம்- 20min

