26.1 C
New York
Wednesday, May 20, 2026

கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17வது ஆண்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு நேற்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு- வடக்கு கிழக்கு சார்பாக, கொள்கைப் பிரகடன அறிவிப்புடன் தொடங்கிய நிகழ்வில், 10.29 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டது.

அதையடுத்து, 10.30 மணியளவில், அகவணக்கம் ஒரு நிமிட இடம்பெற்றதை அடுத்து, 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, சமநேரத்தில் உறவினர் தமது உறவுகள் நினைவாக ஒற்றைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, பொது நினைவுச் சின்னத்தில், மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு முள்ளிவாய்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக தமது அஞ்சலியை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அணிதிரண்டு வந்திருந்தனர்.

Related Articles

Latest Articles