மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் இந்த ஆண்டு 14 மில்லியன் முழுநேர வேலைகளுக்குச் சமமான இழப்புகள் ஏற்படக்கூடும் என, ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2027-ஆம் ஆண்டுக்குள் 38 மில்லியனாக உயரும்.
திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்த ஆண்டு வேலை செய்யும் மணிநேரங்களின் எண்ணிக்கை 0.5% ஆகவும், அடுத்த ஆண்டு 1.1% ஆகவும் குறையக்கூடும் என்று ILO மேலும் கூறியுள்ளது.
உண்மையான தொழிலாளர் வருமானம் முறையே 1.1% தொடக்கம் 3% வரை, அதாவது 860 பில்லியன் பிராங் தொடக்கம் 3 பில்லியன் பிராங் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வேலையின்மை வீதம் 0.1 சதவீதப் புள்ளிகளும், அடுத்த ஆண்டு 0.5 சதவீதப் புள்ளிகளும் உயரும் என்று அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
வளைகுடா நாடுகளுடனான தொடர்புகள் காரணமாக அரபு நாடுகளும் ஆசியா/பசிபிக் பகுதிகளும் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நிலைமை கடுமையாக மோசமடைந்தால், அங்கு வேலை செய்யும் நேரங்களில் 10.2% வீழ்ச்சி ஏற்படக்கூடும். இது கோவிட் பெருந்தொற்று காலத்தில் இருந்த வீதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
“இது ஒரு மெதுவான மற்றும் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய அதிர்ச்சியாகும்,” என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமைப் பொருளாதார நிபுணர் சங்ஹியோன் லீ கூறினார்.
மூலம்- swissinfo

