-6 C
New York
Monday, December 23, 2024

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனலாபம் பெருகும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளரை கவர பரிசு திட்டங்களை அறிவிப்பர்.

ரிஷபம்

இன்று, குடும்பத்தின் ஆசைகளைத் தீர்க்க நினைத்தால் செலவுகள் அதிகமாகும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகைமை பாராட்டாது இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று நண்பர்கள் தேவை அறிந்து செயல்படுவீர்கள். வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

வீண் செலவுகள் அதிகரிக்கும் கோபத்தாலும், மனைவியின் கலகத்தாலும், உறவுகளுக்குள் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.

மகரம்

இன்று, வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.

கடகம்

இன்று, கணவன் மனைவி ஒற்றுமையால், குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பதவி உயர்வு வாகன யோகம் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.

சிம்மம்

இன்று, பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் ஏற்படும் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எல்லா வகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்

வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புனித யாத்திரைகள் மன மகிழ்ச்சியுடன் சென்று வருவீர்கள். .பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள்.

மீனம்

இன்று,வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் வீட்டில் நிம்மதி நிலவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். தொழிலில் அதிக முதலீடு செய்யாதிருப்பது நல்லது.

தனுசு

இன்று,பயணங்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

இன்று, குழந்தைப் பேறு உண்டாகும். சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி ஏற்படும்.

கும்பம்

aquarius-kumbam

இன்று, பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Related Articles

Latest Articles