14.6 C
New York
Sunday, September 27, 2026

இன்று மதியம் முதல் செவ்வாய் இரவு வரை கடும் வெப்ப அலை – சுவிஸ் அரசு எச்சரிக்கை.

அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை ஏற்படக் கூடும் என சுவிஸ் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மதியத்திலிருந்து, சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலை 3 வெப்ப அலை எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

- Advertisement -

பாசல் நகரம் மற்றும் பாசல் கவுண்டி ஆகிய மாகாணங்கள் மிக உயர்ந்த வெப்ப அலை எச்சரிக்கை நிலையில் உள்ளன.

இந்த அறிவிப்பை மத்திய வானிலை மற்றும் காலநிலை ஆய்வு அலுவலகம் (மெட்டியோஷ்வைஸ்) புதன்கிழமை வெளியிட்டது.

மெட்டியோஷ்வைஸின் கூற்றுப்படி, வெப்பம் மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. அதிக வெப்பநிலை உடல் நலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மிக உயர்ந்த நிலை எச்சரிக்கையானது, இரத்த ஓட்டப் பிரச்சனைகள் மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படுவதற்கான அதிக அபாயத்தைக் குறிக்கிறது. நிலை 3-ல், இந்த அபாயம் “கணிசமானது” ஆகும்.

மக்கள் அதிக அளவில் திரவங்களை அருந்தவும், நிழலைத் தேடவும், முடிந்தவரை உடல் உழைப்பைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வெப்ப எச்சரிக்கைகள் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles