14.6 C
New York
Sunday, September 27, 2026

பாகிஸ்தான் பிரதமர், இராணுவத் தளபதியும் அவசரமாக சுவிஸ் விரைவு.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி சையத் ஆசிம் முனீர் ஆகியோர் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்துக்குச் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

“ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வுகளைச் செயல்படுத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து, அதனை முன்னெடுத்துச் செல்லும்” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் மற்றும் மத்திய கிழக்குக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

மூலம்- CNN

Related Articles

Latest Articles