-5.7 C
New York
Sunday, December 28, 2025

T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் வியாஸ்காந்த் !

2024ஆம் ஆண்டுக்கான T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணித்தலைவராக வனிந்து ஹசரங்கவும் துணைத் தலைவராக சரித் அசலங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குசால் மெண்டிஸ், பெத்தும் நிஷங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, நுவன் துஷாரா, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அசித்த பெர்னாண்டோ, யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஸ, ஜனித் லியனகே ஆகியோர் மேலதிக வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles