பாசல்-லாண்ட்ஷாஃப்ட் மாகாணத்தில் உள்ள ஆல்ஷ்வில்லில் கார்டன்ஸ்ட்ராஸ் தெருவில் உள்ள டொக்டர் அகஸ்டின் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 10 மணிக்கு இந்தத் தீ விபத்து தொடங்கியது. ஏழு அம்புலன்ஸ்கள் இன்று அதிகாலை வரை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசல்-லாண்ட்ஷாஃப்ட் மாகாண காவல்துறை இந்தத் தீ விபத்தை உறுதிப்படுத்தியது. இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பதை அவர்களால் இன்னும் கூற முடியவில்லை.
நேற்று இரவு பலர் தெருவில் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியேற்றப்பட்டவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னிங்கர்ஸ்ட்ராஸ் தெரு பல மணி நேரம் மூடப்பட்டிருந்தது.
மூலம்- swissinfo


