27.4 C
New York
Wednesday, July 29, 2026

Swiss விமானத்தில் புகை பரவல் – காதுக்கருவி சார்ஜிங் பெட்டியால் அவசர தரையிறக்கம்

சூரிச், ஜூலை 29: சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான Swiss-இன் LX16 என்ற விமானம், சூரிச்சிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் (JFK) நோக்கிப் புறப்பட்டிருந்த நிலையில், விமானத்திற்குள் புகை பரவியதால் அவசரமாக அமெரிக்காவின் மேய்ன் (Maine) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Bangor) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (சுவிஸ் நேரப்படி) இடம்பெற்றது. சூரிச்சிலிருந்து காலை 10.26 மணிக்கு புறப்பட்ட Airbus A330-300 விமானம், பயணத்தின் போது அவசரநிலையை அறிவிக்கும் 7700 என்ற சர்வதேச குறியீட்டை அனுப்பியதைத் தொடர்ந்து, அருகிலிருந்த விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

புதன்கிழமை Swiss வெளியிட்ட அறிக்கையில், புகை ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், ஒரு பயணியின் வயர்லெஸ் காதுக்கருவியின் (Wireless Earbuds) சார்ஜிங் பெட்டி விமான இருக்கையின் இடுக்கில் சிக்கி அழுத்தப்பட்டதால் அது சேதமடைந்தது. இதனால் அதிக வெப்பம் உருவாகி, பின்னர் புகை வெளியேறியது என்று Swiss தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles