15.5 C
New York
Sunday, September 27, 2026

யாழ். மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரன் காலமானார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்று (29) புதன்கிழமை கனடாவில் காலமானார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான சபேஸ்வரன், சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்தார்.

- Advertisement -

அங்கு கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். 

அவரது மறைவிற்கு ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles