14.6 C
New York
Sunday, September 27, 2026

ஜெர்மன் விமான நிலையத்தில் குண்டு பொருத்தப்பட்ட நிலையில் ட்ரோன் கண்டுபிடிப்பு.

ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில், குண்டு பொருத்தப்பட்ட  ட்ரோன்  ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனிய சரக்கு விமானங்களுக்கு அருகே இரவு நேரத்தில் ஒரு ஊழியரால் அந்த குண்டு கண்டறியப்பட்டதை அடுத்து, ரோபோ மூலம் அது அகற்றப்பட்டதாக சாக்சோனி காவல்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதேவேளை அந்த விமான நிலையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இன்னொரு பொருள் சரக்கு விமானத்துடன் மோதியதில் அந்த விமானம் சிறிய சேதத்துடன் ஹனோவரில் தரையிறங்கியுள்ளது.

இந்த சம்பவங்கள் ஒரு புதிய அளவிலான அச்சுறுத்தலை காட்டுவதாக ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராணுவத் தளங்கள்,  விமான நிலையங்கள்,  எரிசக்தி முனையங்கள்,  துறைமுகங்கள்  மற்றும்  தளவாட  நிறுவனங்களுக்கு  மேலாக  அங்கீகரிக்கப்படாத  ட்ரோன்  பறப்புகள்  நடந்ததைத்  தொடர்ந்து,  ஜெர்மன்  விமான  நிலையங்கள்  உயர்  எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் ரஷ்யாவின் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை எச்சரித்துள்ள போதும், மொஸ்கோ அதை மறுத்துள்ளது.

Related Articles

Latest Articles