21.7 C
New York
Sunday, August 23, 2026

இணைய ட்ரெண்டிங்கிற்காக தவறான திசையில் வாகனம் ஓட்டி விபத்து – 7 பேர் பலி.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ அருகே தவறான பக்கத்தில் ஓட்டிய வாகனம் ஒன்றை காவல்துறை வாகனம் துரத்திச் சென்ற போது, மற்றொரு காவல்துறை வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் காவல்துறையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஒரு சந்தேகத்திற்கிடமான வாகனத்தைக் கண்டறிந்து துரத்தியபோது, ​​அந்த வாகனம் A66 சாலையில் நுழைந்து ஒரு காவல் துறை வாகனத்துடன் மோதியுள்ளது.

நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இதேபோன்ற பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், பன்னிரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அயர்லாந்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து பதின்ம வயதினர் உயிரிழந்தனர்.

இணையத்தில் பரவி வரும் “தவறான பக்கத்தில்” வாகனம் ஓட்டும் போக்கிற்கும் இதற்கும் உள்ள சாத்தியமான தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது சமூக ஊடகங்களுக்காக செய்யப்படுகிறது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles