ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் சுவிட்சர்லாந்து கிளையின் 8வது வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு (10/ 11.10.2026) நாட்களில் மிகச் சிறப்பாக கிறவ்புண்டன் மாநிலத்தில் நடந்தேறியது.
ஏறத்தாழ 110 கராத்தே வீரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த சிகான் ஆர். ஜே . அலெக்சாண்டர் அவர்கள் தலைமை நடுவராகவும் தலைமை விருந்தினராகவும் கலந்து சிறப்பித்து இருந்தார். மேலும்
சிறப்பு விருந்தினர்களாகலான்குவார்ட் நகரபிதா மாண்புமிகு திரு. ஆன்திரியாஸ் தோனி.
செங்காளன் மாநில முதல்வர் மதிப்புக்குரிய ஜெயக்குமார் துரைராஜா.

கிறவ்புண்டன் மாநில இணைப்பாளரும், புலன் மொழி தேர்வு பொறுப்பாளர் திரு விநாயகமூர்த்தி லெனாட்சன்.
முன்னை நாள் தமிழ் மன்ற தலைவர் திரு அல்பிரட் பிரான்சிஸ்.
கிறவ்புண்டன் விநாயகர் கோவில் பொதுப்பணி தலைவர் திரு நமசிவாயம் யோகானநாதன்.
கிறவ்புண்டன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியாரத்தின் உறுப்பினர் திரு அப்பையா சூசைநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கிறவ்புண்டன் மாநிலத்தின் லான்குவார்ட் நகரபிதா அவர்கள் பேசுகையில் “பெற்றோர்களும், பிள்ளைகளும், சமூகமும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த நிகழ்வு என்னை மிகவும் திருப்திப்படுத்தி உள்ளது, இத்தகைய ஒரு விளையாட்டு அமைப்பு தமிழர்கள் மத்தியில் சிறப்பாக இயங்குவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் ” என்று தனது உரையாடலில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்போ போட்டியினை எங்கள் அடுத்த தலைமுறை இளையோர்களே முன்னின்று நடாத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. போட்டியாளர்கள் தொடக்கம் நடுவர்கள், வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை வழங்கியவர்கள், சான்றிதழ்களை எழுதியவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், ஆரம்ப நிகழ்வுகளை வழங்கியவர்கள் என அனைத்துமே எமது இளையோர்களாகவே செயல்பட்டனர். நேர முகாமைத்துவமும், ஒழுக்கமும், ஒழுங்கும் முதன்மை வகித்தன.
பெற்றோர்களது ஒத்துழைப்புடனும், எமது இளைய தலைமுறை தலைமைத்துவத்தின் ஒத்துழைப்புடனும் சீராக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறி இருந்தது








