ஈரான் நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் இருபதுக்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களில் பல பில்லியன் டொலர் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான இடங்கள் குறித்து அறிந்த பிராந்திய அதிகாரிகள் நால்வரிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க இலக்குகளுக்கு ஏற்பட்ட சேதங்களை AP உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வின்படி, ஓகஸ்ட் மாதம் வரை ஈரான் அல்லது ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் நடத்திய 115-க்கும் மேற்பட்ட ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களால், அமெரிக்க உபகரணங்கள் இருந்த 26 ராணுவத் தளங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன. என்றும் கூறப்பட்டுள்ளது.


