அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி கடும் தோல்வியை சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று செனட் சபையின் 35 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் இடைக்காலத் தேர்தல்கள் இடம்பெற்றன.

இந்த தேர்தலில், செனட் சபையில் 33 இடங்களுக்கான முடிவுகள் வெளியான நிலையில், குடியரசுக் கட்சி வசமிருந்த 7 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம், ஜனநாயக கட்சி 54 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது.
பிரதிநிதிகள் சபையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 367 இடங்களில், 228 இடங்களைச் கைப்பற்றி ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ளது.
ட்ரம்பின் குடியரசுக் கட்சி 25 ஆசனங்களை இதுவரை இழந்துள்ள நிலையில் தற்போது, 139 இடங்களைப் பெற்றுள்ளது.
ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு தோல்விகளின் விளைவாக இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.


