-4.8 C
New York
Sunday, December 28, 2025

மன்னாரில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கைது!

மன்னார் – பேசாலை, சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று மாலை மன்னார் மற்றும் பேசாலை பொலிசார் இணைந்து  திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள போதே, புதையல் தோண்டிய 7 பேரையும், பல்வேறு உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை அதிகாரி எனவும், ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் , ஸ்கானர் இயந்திரம்,மந்திரப் பொருட்கள் ஆகியவையும் மீட்கப்பட்டு பேசாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles