சுவிஸ், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 7 நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
அதன்படி, சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவராக Daniel Hunn மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக Sylvia Hartleif ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்து அதிகாரபூர்வமாக பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

நற்சான்றுப் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்களும் ஜனாதிபதி சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


