30 C
New York
Sunday, August 10, 2025

பிறந்த நாளில் யுவதியின் உயிரைப் பறித்த இராணுவ வாகனம்!

யாழ்ப்பாணத்தில் இன்று இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிதிவண்டியில் சென்ற யுவதி, வீதியை கடப்பதற்காக வீதியோரமாக காத்திருந்த போது, மறுகரையாக – புத்தூர் சந்தியிலிருந்து அதிவேகமாகப் பயணித்த இராணுவ உயரதிகாரிகளின் வான், வீதியைக் கடந்து, யுவதியை மோதியது. அதன் பின்னர் மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த யுவதியை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதிக்கு இன்று 23ஆவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles