யாழ்ப்பாணம், புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றுமுன்தினம் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இராணுவ வாகன சாரதியான சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ உயர் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் வீதியோரமாக, வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதி மீது மோதியதில், வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்ற யுவதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் பின்னர் இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் பயணித்த இராணுவ உயர் அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.