வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்துக்கு அருகாமையில் “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு ஊடகத்துறை சார்ந்தோர், ஈடுபாடு உள்ளோர், கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளோர், ஊடகத்துறையில் பங்களிப்புச் செலுத்த விரும்புவோர். பொது அமைப்புக்களைச் சார்ந்தோர், பொதுமக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
* சுவிற்சர்லாந்தின் தமிழ் ஊடகத் துறையினரை ஒருங்கிணைத்தல்
* இரு மொழிச் சூழலில் தாயக வாழ்விட செய்திகளின் பாலமாக இருத்தல்.
* ஊடகத்துறையில் ஈடுபாடு உடையோருக்கு அது சார்ந்த சுவிஸ் அரச அங்கீகாரம் பெற்ற கற்கைகளுக்கான பரிந்துரையும் பயிற்சிகளும் வழங்கல்.
* நீண்ட அனுபவம் மிக்க ஊடகத்துறைசார் வல்லுனர்களூடான பயிற்சிப்பட்டறைகள்.
ஊடகத்துறை சார்ந்த இன்னும் பல விடயங்களை செயற்படுத்த உங்கள் மத்தியில் அறிமுகமாகின்றோம்.
அனைவரும் வருக!
இலக்கு நோக்கி இணைந்து பயணிப்போம்