-9.5 C
New York
Monday, December 23, 2024

நடிகர் ரஜினிக்கு கிடைத்த கோல்டன் விசா!

ஐக்கிய அரபு எமிரேட்சின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தொடர் படப்பிடிப்புகளுக்கிடையில் ஓய்வுக்காக அண்மையில் அபுதாபி சென்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு அபுதாபியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டின் காலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது கலீஃபா அல் முபாரக் வழங்கினார்.

இது தொடர்பான நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “அபுதாபி அரசாங்கத்திடம் இருந்து மதிப்புமிக்க யுஏஇ கோல்டன் விசாவைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும், இந்த விசாவை எளிதாக்கியதற்காக லுலு குழுமத்தின் தலைவரும், என் நல்ல நண்பருமான யூசுப் அலி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles