சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவது பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டவர் ஒருவரை திருமணம் செய்திருந்தாலோ அல்லது சுவிஸ் நாட்டவருக்கு பிறந்திருந்தாலோ அன்றி, சுவிஸ் குடியுரிமை பெறுவது எளிதான விடயமாக இருக்காது என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதுடன், மொழிப்புலமை அவசியம்.
சுவிஸ் குடியுரிமைக்கான மொழித்தேர்வுகளில், பேசுவதில் B1 மட்டத்திலும், எழுதுவதில் A2 மட்டத்திலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.
மொழிப் பரீட்சையின் போது கேட்கப்படும் கடினமான கேள்விகளுக்கு பதிலளிப்பதும் சவாலான ஒரு விடயமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், சுவிஸ் குடியுரிமை உண்மையாகவே தங்க கடவுச்சீட்டாக (Golden passport) ஆக மாறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.