20.4 C
New York
Thursday, April 24, 2025

முல்லைத்தீவில் 14 வயது சிறுமியை சீரழித்த 55 வயது நபர் கைது!

முல்லைத்தீவு – கேப்பாபிலவில்  உணவகம் நடத்திவரும் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின்  உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்த பெற்றோர்,  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்குட்படுத்திய போது, குறித்த  சிறுமி மூன்று மாத  கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  பொலிஸாருக்கு  தெரியப்படுத்தப்பட்டு,  விசாரணை மேற்கொண்ட முள்ளியவளை  பொலிஸார், குறித்த சிறுமியின் நிலைக்கு காரணமான  நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த  நபரை நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக  நபர்  முல்லைத்தீவு கேப்பாபிலவில்  உணவகம் நடத்தி வரும் 55 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles