20.4 C
New York
Thursday, April 24, 2025

ஸ்ரார்லிங்க் சேவைக்கு அங்கீகாரம்

இலங்கையில் “ஸ்ரார்லிங்க்” சேவையை முறைப்படி அங்கீகரிப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களுக்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனகஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் இவ்வாறான எந்தவொரு நிறுவனமும் செயற்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அதன் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டக் கட்டமைப்பை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரார்லிங்குக்கு வழங்கப்படும் உரிமத்தின் தன்மையை நாங்கள் பார்க்கிறோம்.  இதன்பின் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் அரச தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

Related Articles

Latest Articles