20.1 C
New York
Wednesday, September 10, 2025

மெக்சிகோவில் முதல்முறையாக பெண் ஜனாதிபதி தெரிவு!

மெக்சிகோவில் கடந்த 2ம் திகதி  நடந்த ஜனாதிபதி தேர்தலில், முதல் முறையாக இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக பெண்கள் நிறுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில், ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளரான கிளாடியா ஷீன்பாம், 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

மெக்சிகோ நகர மேயராக பணியாற்றியுள்ள இவர், மிகச் சிறந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார.

அவரை எதிர்த்து போட்டியிட்ட, ‘பான்’ எனப்படும் தேசிய செயல்பாட்டு கட்சியின் வேட்பாளர் ஜோசில் கால்வஸ், 28 சதவீத வாக்குகளை பெற்றார்.

Related Articles

Latest Articles