15 C
New York
Thursday, April 24, 2025

தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதிகளை அள்ளுகிறது திமுக கூட்டணி.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும், திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக 20 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் , கொங்கு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்திலும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும், பாமக ஒரு இடத்திலும் முன்னணியில் இருக்கின்றன.

கோவையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும், பாஜகவில் முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன், பொன் இராதாகிருஷ்ணன் போன்றவர்களும் பின்தங்கியுள்ளனர்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், மதுரையில் வெங்கடேசன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன்,  தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்பதூரில் டி ஆர் பாலு , சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் , திருச்சியில் துரை வைகோ , தூத்துக்குடியில் கனிமொழி , நீலகிரியில் ஆ. ராசா , தர்மபுரியில் சௌமியா அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அதேவேளை, நீலகிரியில் மத்திய அமைச்சர் எல். முருகன் , விருதுநகரில் விஜய பிரபாகரன் , திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நடிகை ராதிகா,  இராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், கடலூரில், இயக்குநர் தங்கர் பச்சன், போன்றவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அதேவேளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், மூன்றாவது, நான்காவது இடங்களில் இருக்கின்றனர். அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles