-0.7 C
New York
Sunday, December 28, 2025

பாலஸ்தீனத்துக்கான நிதி உதவிகள் குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் தேவை- சுவிஸ் செனட் தீர்மானம்.

பாலஸ்தீனத்துக்கான நிதி உதவிகள் குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக சுவிஸ் செனட் சபை தீர்மானித்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கான நிதி உதவி ஒதுக்கீடு குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை நேற்று சுவிஸ் செனட்டில், தேசிய சபையின் வெளிவிவகாரக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு இந்த நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்று அந்த முன்மொழிவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 21 உறுப்பினர்கள் அந்த முன்மொழிவுக்கு ஆதரவாகவும், 20 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

Related Articles

Latest Articles