20.4 C
New York
Thursday, April 24, 2025

புதிய தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் கடவுச்சீட்டு கிடைக்காது.

புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, கடவுச்சீட்டு வழங்குவதில்லை என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதால், அதில் ஒட்டப்பட்ட புகைப்படத்துக்கும், கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடன் தயாரிக்கப்படும் வண்ணப் புகைப்படத்துக்கும் பெரிளவில் வேறுபாடுகள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால், இந்த நடைமுறையை அமுல்படுத்த வேண்டிய   இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களில்,  பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் 523 போலி கடவுச்சீட்டுகள்  பற்றிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles