13 C
New York
Thursday, April 24, 2025

இலங்கை வரும் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கை விஜயம் செய்யக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் தடவையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்வின் போது இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு நாட்டு தலைவர்களும் ராஸ்த்ரபதி பவனில் சந்தித்து கொண்ட போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு தாம் விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக ஜெய்சங்கர், ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

Related Articles

Latest Articles