28.5 C
New York
Wednesday, August 12, 2026

புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், புன்னாலைக் கட்டுவன் பகுதியில், இராணுவ வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, இராணுவத்தினரின் பௌசர் வாகனமே, புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

Related Articles

Latest Articles