23.4 C
New York
Monday, July 7, 2025

ஆட்சி அதிகாரத்தை நீடிக்க மறைமுக முயற்சி: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படுவது மக்களின் உரிமைகளில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உரிமையை தட்டிப்பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும், சிலர் தங்களது ஆட்சி அதிகாரத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ள மறைமுக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பொது வாக்கெடுப்பு நடத்தும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்தி தலைவர்களை தேர்வு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles