3 C
New York
Monday, December 29, 2025

சுவிசில் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் – மீள் வாக்கெடுப்புக்கு உத்தரவு.

சுவிட்சர்லாந்தின் Zug  கன்டோனில், வெளிப்படைத்தன்மை முயற்சி தொடர்பான பொது வாக்கெடுப்பு  மீண்டும் செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பின் போது, வாக்குகள் தவறாக எண்ணப்பட்டதால்,  அவை செல்லாது என அறிவிக்கப்பட்டது.

Zug இல் உள்ள 11 நகராட்சிகளில் நான்கில் மட்டுமே வாக்ககள் சரியாக கணக்கிடப்பட்டதாக கன்டோன்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நகராட்சிகளில் சிறிய முரண்பாடுகளும்,  ஏனைய நான்கில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளும் இருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை முயற்சிக்காக அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில்  துளையிடப்பட்டது நகராட்சி வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Related Articles

Latest Articles