14.6 C
New York
Sunday, September 27, 2026

சுவிசில் பாரிய வெடிப்பு – 2 பேர் பலி, 11பேர் காயம்.

சுவிசின் Nussbaumen AG இல் நேற்றுமாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப் பரவல் சம்பவத்தில்,  இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில்,  11 பேர் காயமடைந்ததாக கன்டோன் பொலிசார்  தெரிவித்தனர்.

- Advertisement -

இந்தச் சம்பவம்  உயரமான கட்டடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பால் சுற்றுவட்டார பகுதி கடுமையாக அதிர்ந்தது. எனினும் இந்த வெடிப்புக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

ஆங்கிலம் மூலம்- The swiss times

Related Articles

Latest Articles