-0.1 C
New York
Sunday, December 28, 2025

சென். ஜொஹான் மாவட்டத்தில் அதிகாலையில் சூழ்ந்த இருள்!

பாசல்   கன்டோனின், சென். ஜொஹான் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை மின்தடை ஏற்பட்டது.

இன்று அதிகாலை 4.19 மணி தொடக்கம் மாவட்ட மின் நிலையம் செயற்படவில்லை என IWB இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

மின்சார இணைப்பு (கேபிள்) கோளாறினால் இந்த மின் தடை ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6.20 மணியளவிலேயே மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலையிலேயே மின்சாரத் தடை ஏற்பட்டதால் பெருமளவு மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles