-0.7 C
New York
Sunday, December 28, 2025

மின்மாற்றி வெடித்ததால் தடைப்பட்ட மின்சாரம்.

Vaud கன்டோனில் Pully  பகுதியில் நேற்று பிற்பகல் திடீர் மின்தடை ஏற்பட்டது.

Tetrapak  பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்ததை அடுத்தே, மின்தடை ஏற்பட்டதாக கன்டோனல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெடிப்பை அடுத்து மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், தொலைபேசி மற்றும் தரவு சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கன்டோனல் பொலிசார் கூறினர்.

பPully  யில் வசிப்பவர்கள் குளிர்சாதனப் பெட்டிகளை தேவையில்லாமல் திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

நள்ளிரவுக்கு சற்று முன், அந்த முன்னறிவிப்புகள் மீளப்பெறப்பட்டன.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles